முகப்பு
திருச்சி

காவிரி பிரச்னைக்கு தீர்வு காண ரமலான் மாதம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை: மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை தீர்மானம்

காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபடுவது என திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை முடிவு செய்துள்ளது.

Updated On : 15 மே, 2018 at 3:58 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ரமலான் மாதம் முழுவதும் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபடுவது என திருச்சி மாவட்ட மஹல்லா மஸ்ஜித் ஜமாஅத் பேரவை முடிவு செய்துள்ளது.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பேரவையின் முதல் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, பேரவைத் தலைவர் சையது ஜாபர் தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் மன்னான் சாஹிப் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலர் அப்துல்வகாப், பொருளாளர் சிராஜுதீன் ஆகியோர் பேரவை செயல்பாடுகள் குறித்து பேசினர். மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இனி பயனில்லை. எனவே, மழை பெற வேண்டும் வகையில் இறைவனிடம் கேட்டு ரமலான் மாத நோன்பு நாள்களில் இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் பிரார்த்தனை செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிவாசல்களிலும் இந்த பிரார்த்தனை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள அரசு தலைமை காஜி அறிவிக்கும நாளில் அனைத்து தரப்பினரும் ஒரே நாளில் ரமலான் பெருநாளை கொண்டாட வேண்டும்.
அதே நாளில் ரமலான் தொழுகையை நடத்த வேண்டும். ஜமாஅத் மூலம் நடத்தப்படும் திருமணங்களுக்குப் பிறகு தம்பதியர் காவல்துறைக்கு சென்று முறையிட்டால் ஜமாஅத் நிர்வாகத்தின் கருத்தை கேட்டு மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரவைக்கு வங்கிக்கணக்கு தொடங்குவது, பேரவை அலுவலகம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.