முகப்பு
திருச்சி

சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

திருச்சியில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 15 மே, 2018 at 3:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருச்சியில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திங்கள்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடிக்கு மாற்றுவதால் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் வெகு தொலைவுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கள்ளிக்குடி பகுதியில் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை காந்திமார்க்கெட்டில் இருந்து சுமைத்தூக்கும் தொழிலாளர்கள், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பெரிய கடைவீதி பகுதியில் பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, பேரணியாக செல்ல அனுமதிஇல்லை என்றனர்.
இதனையடுத்து போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் அகிலா சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.