முகப்பு
திருச்சி

முருகூரில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா நிறைவு

துறையூர் அருகே முருகூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 15 மே, 2018 at 4:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

துறையூர் அருகே முருகூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது.
திருவிழாவின் முதல்நாளான மே 11ஆம் தேதி செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம், ஊரணி பொங்கல், மா விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. இரண்டாம் நாளில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், ஞாயிற்றுக்கிழமை (மே 13) முளைப்பாரி, பால்குடம், தீர்த்தக் குடம், அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நிறைவு நாளான திங்கள்கிழமை மாரியம்மனுக்கு கிராம மக்கள் பூச்சாற்றி மாவிளக்கிட்டு வழிபட்டனர். இதையொட்டி, மங்கள வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.