முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவினர் 5 பேர் கைது
கர்நாடகத்தில் முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தார்.
கர்நாடகத்தில் முதல்வராக பதவி ஏற்கவுள்ள குமாரசாமி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாஜகவை சேர்ந்த திருவேங்கடம், சர்வேஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் அவருக்கு கருப்புக்கொடி காட்டப் போவதாகத் தகவல் வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அங்கே நின்ற 5 பேரையும் போலீஸார் கைது செய்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கடவுளிடம் சொல்லுங்கள்!
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குமாரசாமி தரிசிக்கச் சென்றபோது வரிசையில் நின்ற பக்தர்கள் "நீங்களாவது எங்களுக்குத் தண்ணீர் தருவீர்களா' எனக் கேட்டனர். அதற்கு குமாரசாமி "கடவுளிடம் சொல்லுங்கள்' எனக் கூறிச் சென்றார்.