27ஆவது நினைவு தினம்: ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸார் மரியாதை
பாரத பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரத பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகிலுள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.ஜவஹர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, திருச்சி வடக்கு மாவட்டத் தலைவர் கலை, இளைஞரணி மாவட்டத் தலைவர் அருண், முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் ஹேமா, திருச்சி ரெக்ஸ், பெஞ்சமின் இளங்கோ, கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம் , முத்து, ரவி, ராஜ்மோகன், குழந்தைவேல், ஆனந்தராஜ், கட்சி நிர்வாகிகள் சிந்தாமணி ப.நாகராசன், சந்திரன், சிவா, மூர்த்தி, மகளிரணியைச் சேர்ந்த கௌரி, ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.