திருச்சி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், திருச்சியில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் மா. தென்னலீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சரவணவேல் முன்னிலை வகித்தார்.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு முறையாக கலந்தாய்வு நடத்த வேண்டும். காலிப் பணியிடங்களை மறைத்து அந்த இடங்களை பணத்துக்கு விற்பனை செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும். 1,500-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  நீட் பயிற்சி வகுப்புக்கு ஆசிரியர்களை கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் திருச்சி கல்வி மாவட்ட தலைவர் நாசர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தாமோதர கண்ணன், செல்வகுமார் பழனிச்சாமி, முருகேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT