திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 140 மி.மீ மழை

DIN

திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 140 மி.மீ. மழை பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.  இதன் காரணமாக திங்கள்கிழமை இரவில் மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
செவ்வாய்க்கிழமை காலையில் வெயில் காணப்பட்டாலும், பிற்பகலில் மாநகரிலும், புறநகரிலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்) :
லால்குடி- 1 மி.மீ,  மணப்பாறை- 8.40 புள்ளம்பாடி- 4.60, துறையூர்- 15, திருச்சி விமானநிலையம்- 6.60, திருச்சி டவுன்- 4.50, மருங்காபுரி- 4.20,  பொன்னணியாறு அணை- 1.60, , நவலூர்குட்டப்பட்டு- 5, நந்தியாற்றுத்தலைப்பு- 4.80, கல்லக்குடி- 2.40, வாய்த்தலை அணைக்கட்டு- 1, சமயபுரம்- 8, தேவிமங்கலம்- 8.20, கொப்பம்பட்டி 26, கோவில்பட்டி 9.20, தென்பரநாடு- 14, பொன்மலை- 14.60, திருச்சி ஜங்சன்- 6, துவாக்குடி- 5  மி.மீ.  மாவட்டத்தில் மொத்தமாக 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT