திருச்சி

உருமு தனலட்சுமி கல்லூரியில்  சர்வதேசக் கருத்தரங்கம்

DIN

திருச்சி காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சர்வதேசக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் வணிகவியல்துறை உயராய்வு மையம் சார்பில், வணிகவியலும்-மேலாண்மையும்- சிக்கல்களும்- தீர்வுகளும் என்ற மையக் கருத்தைக் கொண்டு நடத்தப்பட்ட கருத்தரங்கத்துக்கு  கல்லூரி முதல்வர் டி.  கிறிஸ்டி செல்வராணி தலைமை வகித்தார்.
முதல் அமர்வில்  வணிகவியல்துறையில் தற்போது உள்ள பிரச்னைகளும், தீர்வுகளும் குறித்து ஆய்வு  செய்து  எத்தியோப்பியா ஆம்போ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் ஏ. தமிழரசும், மேலாண்மையில் உள்ள பிரச்னைகளும் தீர்வுகளும் குறித்து திருச்சி பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியின் இணைப் பேராசிரியர் என்.ரம்யாவும் பேசினர். மேலும், இந்த கருத்தரங்கில் சேவைவரி, பங்குச்சந்தை, தொழில்முனைவோர் வளர்ச்சி, ஆன்லைன் வணிகம் குறித்து விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் ஆராயப்பட்டன.  முன்னதாக துறைத் தலைவர் டி. ஜேனட் ராஜகுமாரி வரவேற்றார்.கருத்தரங்கில் வணிகவியல் மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT