திருச்சி

துவரங்குறிச்சியில் விநாயகர் சிலை விசர்ஜனம்

DIN

துவரங்குறிச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
துவரங்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 42 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதில் 36 சிலைகள் வியாழக்கிழமை இரவு விசர்ஜனம் செய்யப்பட்டது. துவரங்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் பேருந்து நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கண்ணன் தலைமையில் விசர்ஜன ஆன்மிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு விஸ்வஹிந்து பரிஷத் மாநிலப் பொருளாளர் என்.ஆர்.என்.பாண்டியன் காவி கொடியசைத்து விசர்ஜன ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். இந்து முன்னணி கோட்டச் செயலாளர் இராம.சிவக்குமார், மாவட்டச் செயலாளர்கள் பி.ஆறுமுகம், எஸ்.பி.தண்டபாணி, பாஜக மாவட்ட துணைத் தலைவர் பிரின்ஸ்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் அருள்மிகு பூதநாயகி அம்மன் ஆலய தெப்பக்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. திருச்சி டிஐஜி லலிதா லெட்சுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் 600க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT