திருச்சி

பச்சமலையில் பழங்குடியின சான்று கோரியவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை

DIN


துறையூர் வட்டம் பச்சமலையில் உள்ள வெவ்வேறு கிராமங்களில் பழங்குடியின சான்று கோரியவர்களிடம் முசிறி கோட்டாட்சியர் சனிக்கிழமை நேரில் விசாரணை செய்தார்.
பச்சமலையில் கோம்பை ஊராட்சிக்குள்பட்ட ஏரிக்காடு, எருமப்பட்டி, மருதை, செம்புளிச்சாம்பட்டி, தாளூர் ஆகிய கிராமங்களிலிருந்தும் 70-க்கும் மேற்பட்டோர் பழங்குடியின சான்று வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் அந்தந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று மனுதாரர் குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்பாக நேரில் விசாரணை செய்தார். அவருடன் மண்டல துணை வட்டாட்சியர்கள் தனலட்சுமி(துறையூர்), ஆனந்த்(உப்பிலியபுரம்), வருவாய் ஆய்வர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் முரளி(வண்ணாடு), ஜெகநாதன்(கோம்பை) உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் சென்று மனுதார்கள் விவரங்களை கேட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT