திருச்சி

பொன்னம்பட்டி பேரூராட்சியில் வரி சீராய்வு அளவீடு பணிகள்

DIN

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வரி சீராய்வுப்  பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து செயல் அலுவலர் ச. சாகுல்அமீது  வெளியிட்ட அறிக்கை: பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதி குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் என உயர்வு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பேரூராட்சி பகுதிகளை (அ,ஆ,இ) என மூன்று மண்டலங்களாகப் பிரித்து  வரி உயர்வு செய்யப்படுகிறது. மண்டல விவரங்கள் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
எனவே, அளவீடு செய்ய வரும் பணியாளர்களுக்கு பேரூராட்சி பகுதி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, கட்டட உரிமையாளர்கள் சுய மதிப்பீட்டுப் படிவங்களை பெற்று விடுதலின்றி பூர்த்தி செய்து 30.09.2018 -க்குள் வழங்க வேண்டும், வழங்காத பட்சத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அளவை செய்து அதனடிப்படையில் முடிவு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT