திருச்சி

75 ஆண்டுகளுக்குப் பிறகு: மணப்பாறையில் எருதுகள் ஓட்டத் திருவிழா

DIN


திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாலப்பட்டி ஸ்ரீ பெருமாள்சாமி கொழுக்கட்டை ஆலய எருது ஓட்டம் திருவிழா 75 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ராஜ கம்பளத்து நாயக்கர் இன மக்கள் தாங்கள் வளர்க்கும் எருதுகள் இறந்த பின் புதைக்கும் எருது குட்டை எனப்படும் பகுதியில் திருவிழா எடுத்து வழிபடுகின்றனர்.
சனிக்கிழமை மாலை விழாவின் முக்கிய நிகழ்வான எருது ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காட்டு மற்றும் சீல் நாயக்கர், மந்தைகளைச் சேர்ந்த ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். நிகழ்வில் அவர்கள் வளர்த்து வரும் எருதுகள் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வழிபாட்டு தலத்தை நோக்கி ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்பட்டன. கொத்து கம்பு பூத்தாண்டும் பகுதி என எல்லை வரையறுக்கப்பட்ட பகுதியில் விரிக்கப்பட்டிருக்கும் துண்டை தாண்டிச்சென்ற எருதுமேல் மஞ்சள் பொடி தூவப்பட்டு முதலாவதாக வந்ததாக அடையாளம் காணப்பட்டது.
முதலில் வந்த எருதுக்கு எலுமிச்சை கனியும் மஞ்சளும் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. எருதுவிழா நிறைவுற்றதை தொடர்ந்து நாயக்கர் இனமக்களின் தேவராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT