திருச்சி

திருச்சி-சேலம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்

DIN

திருச்சி ரயில்வே கோட்டத்தில் சேலம் வழித்தடத்தில் பாலம் அமைப்பதற்கான பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால்  செவ்வாய்க்கிழமை ( ஏப். 23) அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர்-திருச்சி-கரூர் டெமு பயணிகள் ரயில் (வண்டி எண்கள். 76836/76833)  திருச்சி ஜங்ஷன்-கோட்டை ரயில் நிலையம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண். 56110) கோட்டை- ஜங்ஷன் ரயில் நிலையம் இடையே ரத்து செய்யப்படுகிறது.  திருச்சி -பாலக்காடு பயணிகள் ரயில் (வண்டி எண். 56713) திருச்சி ரயில் நிலையத்திலிருந்து  மதியம் 1 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக மாலை 3 மணிக்கு புறப்படும். பாலக்காடு டவுன்-திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண். 56712) ஈரோடு-கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே 120 நிமிடங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT