திருச்சி

திருவானைக்கா மேம்பாலம் பொங்கி எழுந்த பொதுமக்கள்!

DIN


திருவானைக்கா மேம்பாலப் பணிகள் முழுமையடையாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை தடுப்புக் கட்டைகளை அகற்றி தங்களது வாகனத்தை ஓட்டிச்சென்றனர் . இதையடுத்து, பாலத்தில் மீண்டும் தடுப்புக் கட்டைகள் அமைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.   
திருவானைக்கா ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கி சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால் திருவானைக்கா பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். தற்போது 95 சதவிகித பணிகள் முடிவடைந்து தரை தளத்தில் தார் சாலை போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 
அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை காலை பாலத்தின் இருபுறமும் இருந்த தடுப்புக் கட்டைகளை அகற்றி விட்டு ஆட்டோ, கார் , இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்கத் தொடங்கினர். இதையறிந்த சம்பந்தப்பட்ட துறையினர்  மீண்டும் தடுப்புக்கட்டை அமைத்து பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர். வியாழக்கிழமை காலை சுமார் 11 மணிவரை போக்குவரத்து நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT