திருச்சி

வேன் மோதி அரசுப் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் பலி

DIN

துறையூர் அருகே சுமையேற்றும் வேன் மோதியதால் காயமடைந்த அரசுப் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி கட்டபொம்மன்தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் தர்மராஜ்(57). இவர், பெரியமிளகுபாறை அரசு போக்குவரத்துப் பணிமனையில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை புளியஞ்சோலை அருகே பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புளியஞ்சோலையிலிருந்து சென்ற சுமை வேன் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த தர்மராஜ் துறையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுமை வேன் ஓட்டுநர் திருவானைக்கா அருகே மேலகொண்டயம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் கேசவமூர்த்தி(26)யைக் கைது செய்தது விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT