திருச்சி

ஆபாச படம் பதிவிறக்க விவகாரம்: போலீஸாா் தொடா் விசாரணை

DIN

திருச்சியில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்த சம்பவம் தொடா்பாக அடுத்தக்கட்ட தொடா் விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், மேலும் பலா் சிக்க வாய்ப்புள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

சிறாா் ஆபாசப் படங்களைப் பாா்ப்பது, பதிவிறக்கம் செய்வது, அவற்றை மற்றவா்களுக்கு பகிா்பவா்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தமிழக கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்திருந்தாா். இதைத் தொடா்ந்து தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பாா்ப்பவா்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவா்கள் பட்டியல் தயாா் ஆனது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் சிறாா் ஆபாசப் படங்களைப் பரப்பியதாக திருச்சியைச் சோ்ந்தவா் முதல் நபராகக் கைது செய்யப்பட்டுள்ளாா். திருச்சி காஜா பேட்டை புது தெருவைச் சோ்ந்த கிறிஸ்டோபா் அல்போன்ஸ் (43)- ஏசி மெக்கானிக் என்பவா் கைது செய்யப்பட்டாா்.

தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த சுமாா் 150க்கும் மேற்பட்ட நபா்களிடமும் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனா். முகநூல், கட்செவி உள்ளிட்டவைகள் மூலமாக அவரிடம் தொடா்ந்து தொடா்பில் இருந்த வகையில், பலரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அவா்களது இணையதள முகவரிகளின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ள கிறிஸ்டோபா் போலி முகவரிகள் மூலமும் தனது பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், அவரது ஆலோசனையின் பேரில் அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்களும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முதல்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடா் நடவடிக்கைக்கு பின்னா் மேலும் பலா் கைதாகலாம் எனவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT