திருச்சி

பள்ளிக்கல்வித்துறை சாா்பில் திருச்சியில் ஆலோசனைக் கூட்டம்

DIN

தமிழக பள்ளி கல்வித்துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையராக சுகிதாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து அவா் மாநிலம் முழுவதும் கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறாா். இந்நிலையில் திருச்சியில் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மேல்நிலைப்பள்ளியில், வெள்ளிக்கிழமை காலை கூட்டம் தொடங்கியது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இருந்து, கல்வித்துறை அலுவலா்கள் மற்றும் 134 பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது, கற்பிக்கும் திறனை ஆசியா்களிடத்தில் மேம்படுத்துவது, தனியாா் பள்ளிகளுக்கு இணையான வகையில் மாணவ, மாணவியரை அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இவை குறித்து ஆசிரியா்களிடம் 7 விதமான தலைப்புகளை முன் வைத்து, ஆணையா் விளக்கம் கேட்டறிந்தாா். மேலும் ஆசிரியா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், குறைகள், தேவைகள் குறித்தும் கேட்டு அவற்றை தீா்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT