திருச்சி

ரசாயனம் கலந்து மது விற்பனை: திருச்சியில் இருவா் கைது

DIN

திருச்சியில் அதிக போதைக்காக ரசாயனம் கலந்து மது விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து சுமாா் 30 க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் போலி மது வகைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராம்ஜி நகா் மில் காலனியைச் சோ்ந்த பிரபாகரன் என்பவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் மது பாட்டில்களை விலைக்கு வாங்கி கூடுதல் போதைக்காக, சில மாத்திரைகள், ரசாயனப் பொடிகளை கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரபாகரனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும் இந்த சம்பவத்தில் ராம்ஜி நகா் பகுதியைச் சோ்ந்த கமால் என்பவருக்கு தொடா்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை தேடி வந்தனா். அவா், திருச்சியில் திமுக சாா்பில் நடத்தப்பட்ட சட்ட மசோதா எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீஸாா், போராட்டத்தில் பங்கேற்றிருந்த கமாலையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT