திருச்சியில் 68.5 கிராம் தங்க நகைகள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 68.5 கிராம் கடத்தல் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த மலேசியாவை சேர்ந்த சந்திரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி கொண்டு வந்த ரூ. 2.29 லட்சம் மதிப்புள்ள 68.500 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், திருச்சியிலிருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை சோதனையிட்ட போது தஞ்சாவூரை சேர்ந்த கலைவாணன்(37) என்பவரிடமிருந்து அனுமதியின்றி வைத்திருந்த இந்திய பணம்
ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.