முகப்பு
திருச்சி

போலி கடவுச்சீட்டு: தஞ்சை இளைஞர் கைது

துபையில் இருந்து வந்த விமானத்தில்  போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:01 am IST
பகிர்:

துபையில் இருந்து வந்த விமானத்தில்  போலி கடவுச்சீட்டில் பயணம் செய்த தஞ்சையைச் சேர்ந்த இளைஞரை திருச்சி விமானநிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.  
துபையிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏர் இந்தியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் மேலத்திருப்பாந்துறை விரலிக்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது இக்பால்(35) என்பவர், போலி முகவரியில் கடவுச்சீட்டு பெற்று திருச்சி வந்தது தெரிய வந்தது. 
இதையடுத்து புகாரின் பேரில் திருச்சி விமானநிலைய போலீஸார் முகமது இக்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.