திருச்சி

துறையூர் அருகே பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

DIN

கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல், நிகழாண்டில் பயில்வோருக்கு வழங்குவதா என்று கூறி,  துறையூர் அருகே அரசுப் பள்ளியை பெற்றோர்கள் திங்கள்
கிழமை முற்றுகையிட்டனர்.
புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-18, 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், நிகழ் கல்வியாண்டில்பயில்வோருக்கு செவ்வாய்க்கிழமை மடிக்கணினி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த முன்னாள் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று விவரம் கேட்டபோது,  பள்ளி நிர்வாகம்  கேட்டை இழுத்து மூடியது. இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர், புலிவலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்ற போது, அவர்களுடன் முன்னாள் மாணவர்களின் பெற்றோர்களும் உள்ளே நுழைந்து தலைமையாசிரியர் ராமகிருஷ்ணனை முற்றுகையிட்டனர்.  இன்னும் 3 மாதங்களில் பழைய மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க அரசு உறுதியளித்துள்ளதாக தலைமையாசிரியர் கூறிய போது, அதுவரை தற்போதைய மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக்கூடாது என்று முன்னாள் மாணவர்களின்பெற்றோர் வலியுறுத்தினர்.  இதைத் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை அவர்கள் மனுவாக அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT