திருச்சி

விஏஓ-வுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மணல் திருட்டைத் தடுக்க சென்ற விஏஓ-வுக்கு கொலை  மிரட்டல்  விடுத்தவரை முசிறி போலீஸார் வியாழக்கிழமை  கைது செய்தனர்.
முசிறி அருகே வெள்ளூர் சத்திரம் காவிரியாற்றுப் பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாகக்  கிடைத்த தகவலின்பேரில் முசிறி கிழக்கு பகுதி விஏஓ தேவராஜ் (32)  வருவாய்த் துறையினருடன் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினார்.
வெள்ளூர் சத்திரம் பகுதியில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் சாக்கு மூட்டைகளில் அனுமதியின்றி காவிரி ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகன ஓட்டுநரான சோழம்பட்டி சுரேஷை (27) வேனை எடுத்து கொண்டு காவல் நிலையம் வருமாறு விஏஓ கூறியதற்கு  வர மறுத்த  அவர்,  தகாத வார்த்தைகளால் பேசி வருவாய்த் துறையினரை வேன் ஏற்றி கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து  விஏஓ தேவராஜ் முசிறி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார்  சுரேஷை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT