திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில்  இருவர் பலி

DIN

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். 
இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறியது: திருச்சி மணப்பாறை மார்க்கத்தில் உள்ள ராம்ஜிநகரை அடுத்த பூங்குடி பகுதியில், வியாழக்கிழமை பகல் ரயிலில் அடிபட்டு சுமார் 60 வயதுள்ள ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை. அதேபோல திருச்சி அரியமங்கலம் மற்றும் டவுன் ரயில் நிலைய நடைமேடை பகுதியில் சுமார் 65 வயதுள்ள நபர் வியாழக்கிழமை இறந்து கிடந்தார். அவரைப்பற்றிய விவரமும் தெரியவில்லை. திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT