திருச்சி

அரசு மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் சேரகலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

லால்குடி  புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் சேர  விரும்புவோர் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புள்ளம்பாடி அரசு மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் கம்மியர் மின்னணுவியல் (என்சிவிடி), டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர் , கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர், தையலர் (துணி வெட்டுதல் மற்றும் தைத்தல்), பல்லூடக அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள் (மல்டி மீடியா அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்), கணினி மயமாக்கப்பட்ட பூ தையல் மற்றும் ஊசி வேலைப்பாடுகள் மற்றும் இயந்திர வேலையாள் பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. 
இவற்றில்  இயந்திர வேலையாள் பாடப்பிரிவுக்கு மட்டும் 2 ஆண்டுகள் பயிற்சியும் 14 முதல் 40 வயதுக்குள் உள்ளவராக இருத்தல் வேண்டும். மற்றவைகளுக்கு ஓராண்டு பயிற்சி வழங்கப்படுகின்றது. அனைத்துக்கும் கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சியாகும். இவற்றில் நிகழாண்டு வகுப்புகளில்  சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n. ‌g‌ov.‌i‌n என்ற இணையதள முகவரியில் ஜூன் 27- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். அல்லது பயிற்சி மையத்துக்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். 
பயிற்சி பெறுவோருக்கு கட்டணங்கள் ஏதுமில்லை. மேலும் மாதந்தோறும் ரூ. 500 உதவித் தொகை மற்றும் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பயணச்சலுகை, வரைபடக் கருவிகள் உள்ளிட்டவைகளும் வழங்கப்படும்.  
 மேலும் விவரங்களுக்கு  பயிற்சிமையத்துக்கு நேரில் சென்றோ அல்லது 04329-241300 என்ற தொலைபேசியிலோ தொடர் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT