திருச்சி

குடிநீர்ப் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை

DIN

திருச்சி மாவட்டத்தில் நிலவும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
திருச்சி பெரியமிளகுப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புறநகர் மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளான மணப்பாறை, வையம்பட்டி, துறையூர், மருங்காபுரி உள்ளிட்ட இடங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது. தொட்டியம் போன்ற ஆற்றுப்பாசன, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கூட வறட்சி காணப்படுகிறது.
எனவே திருச்சியை வறட்சி மாவட்டமாக அறிவித்து, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் காணப்படும் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு மாவட்டநிர்வாகக் குழு உறுப்பினர் சி. தங்கராசு தலைமை வகித்தார்.  மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT