திருச்சி

மார்ச் 13-இல் அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம்

திருச்சி மண்டல அளவிலான அஞ்சல்துறை ஓய்வூதியர் குறைதீர் முகாம்  மார்ச் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

DIN

திருச்சி மண்டல அளவிலான அஞ்சல்துறை ஓய்வூதியர் குறைதீர் முகாம்  மார்ச் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைமையகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காதவர்கள், ரயில்வே மற்றும் தொலைபேசி துறைகளில் பணிபுரிந்து அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் திருச்சி மண்டல அளவிலான குறைதீர் முகாம் மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவர் அலுவலகத்தில் மார்ச் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் தீர்வு செய்ய வேண்டிய மனுக்களை முன்னதாகவே அனுப்ப வேண்டும். எனவே, திருச்சி மண்டலத்தில் உள்ள ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை மனுக்களாக வியாழக்கிழமைக்குள் (மார்ச் 7) பதிவு அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
கோட்ட அளவில் ஏற்கெனவே மனு அளித்து தீர்வு கிடைக்காதவர்களும் தங்களது குறைகளை அனுப்பலாம். முகாமில் நேரடியாக வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT