திருச்சி

கொடிக்கம்பம் அகற்றம்: கட்சியினர் மீது வழக்கு

DIN

கட்சியினர் மீது துறையூர் நகராட்சி ஆணையர் மற்றும் விஏஓ  கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர். 
முன்னறிவிப்பின்றி துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பு இருந்த அனைத்துக் கட்சி கொடிக்கம்பம், பீடம், கல்வெட்டு ஆகியவற்றை அகற்றியதைக் கண்டித்து துறையூர் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியல் செய்தனர்.
இந்நிலையில் துறையூர் விஏஓ போஜராஜன் கொடுத்த புகாரின் பேரில் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமார் உள்பட திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட், புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மீது துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர். 
ஆணையர் புகார்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் 
அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, புதியதமிழகம், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் துறையூர் நகரில் அனுமதியின்றி பதாகைகள் வைத்திருப்பதாக துறையூர் நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன் கொடுத்த தனிப் புகாரின் பேரிலும் துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT