திருச்சி

தேசியக் கல்லூரியில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் தொடக்கம்

DIN

திருச்சி தேசியக் கல்லூரியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
மாநகராட்சியுடன் கல்லூரி நிர்வாகம் இணைந்து நடத்திய  முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஆர். சுந்தரராமன் தலைமை வகித்தார்.  மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் முகாமைத் தொடக்கி வைத்து பேசினார். மாநகராட்சி உதவி ஆணையர் பிரபாகரன், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பிரசன்ன பாலாஜி, பயிற்சியாளர் சிவகுமார் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அடிப்படை உடற்பயிற்சி, விருப்ப விளையாட்டுப் பயிற்சிகள் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படுகின்றன. 25 நாள்கள் நடைபெறும் பயிற்சியில் 6 முதல் 21 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என தேசியக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பிரசன்ன பாலாஜி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT