திருச்சி

திருச்சி விமானநிலையத்தில் ரூ.41.71 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில்  ரூ. 41.71 லட்சம் கடத்தல தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

DIN


திருச்சி விமானநிலையத்தில்  ரூ. 41.71 லட்சம் கடத்தல தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை வந்த மலிண்டோ விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 
அப்போது சிவகங்கையைச் சேர்ந்த  சையதுஹுசைன்(23), சென்னையைச் சேர்ந்த முகமது முஸ்தபா(25) ஆகிய இருவரும் தலா 210 கிராம் வீதம் ரூ.13.31 லட்சம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. 
இதே போல சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புதுக்கோட்டை தீபக்குமார்(24), தஞ்சாவூர் பிரகாஷ்(23) ஆகிய இருவரும் தலா 449 கிராம் வீதம் ரூ. 28.40 லட்சம் தங்கத்தை ராடு வடிவில் கடத்தி வந்தது தெரிய வந்தது. 
சனிக்கிழமை மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.41.71 லட்சம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்  4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT