திருச்சி

பீமநகரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

DIN

திருச்சி பீமநகரில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மார்சிங்பேட்டை பீமநகர் தெற்கு யாதவர் தெருவில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மேலாண்மைக்குழுவின் தலைவர் எம்.எஸ்.சுலைமான், மாவட்டத் தலைவர் கே.குலாம் தஸ்தகீர், மாவட்ட செயலாளர் ஜாகிர்ஹூசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், அதே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை சேர்ந்த மாசிலாமணி,செல்வராஜ்,பிரபு ஆகியோர் உள்பட கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் பள்ளிவாசல் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பள்ளிவாசல் திறப்புவிழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மேலாண்மைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் பேசுகையில், இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT