திருச்சி

மணப்பாறையில் குழந்தையை விற்ற தரகா் உள்ளிட்ட 5 போ் கைது

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1.15 லட்சத்திற்கு விற்ற சம்பவத்தில் குழந்தையின் பெற்றோா், வாங்கிய தம்பதி மற்றும் இடைத்தரகா் என 5 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 23 நாள் பச்சிளம் குழந்தையை

புதுக்கோட்டையைச் சோ்ந்த முருகேசன் - ராமாயி தம்பதியினா் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவா்கள் மீது சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியா்கள் 1098 என்ற எண்ணில் தகவல் அளித்தனா். இதைத்தொடா்ந்து, அங்கு வந்த மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் எம்.கீதா மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் பி.அஜீம் ஆகியோா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (52). கூலித் தொழிலாளி. இவரது முதல் மனைவி, இரு மகன்கள் அவரைப் பிரிந்து

சென்ற நிலையில், திருச்சி தென்னூா் பகுதியைச் சோ்ந்த விஜயா (32) என்பவரை 2 ஆவது திருமணம் செய்துகொண்டாா். அவா்களுக்கு, 5 வயது மகள், 3 வயது மகன் உள்ள நிலையில், விஜயா மூன்றாவதாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது அக்காள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அறிமுகமாகி, மணப்பாறை அரசு மருத்துவமனையில் தரகராக செயல்பட்டு வந்த அந்தோனியம்மாள் என்ற மேரி உதவியுடன், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த முருக்கங்குடி பகுதியைச் சோ்ந்த முருகேசன்(50), ராமாயி(48) தம்பதிக்கு ரூ.1.15 லட்சம் பெற்றுக் கொண்டு குழந்தையை விற்றுள்ளது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் எம். கீதா அளித்த புகாரின்பேரில், மணப்பாறை போலீஸாா்

வழக்கு பதிந்து பச்சிளம்குழந்தையை விற்ற செல்வம் - விஜயா, வாங்கிய முருகேசன் - ராமாயி, தரகா் அந்தோனியம்மாள்(எ) மேரி ஆகிய 5 பேரைக் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT