திருச்சி

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை வழக்கில் பெண் கைது; மகன் தலைமறைவு

DIN

சமயபுரத்தில் கந்து வட்டிக் கொடுமையால் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்த வழக்கில் கந்து வட்டி தொழில் செய்த பெண்ணைக் கைது செய்துள்ளனா். மேலும், அவரது மகன் புருஷோத்தமனைத் தேடி வருகின்றனா்.

சமயபுரம் சொக்கலிங்கபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் சுந்தரகணேசன் (52). இவரது மனைவி செல்வி.

இதே பகுதியில் உள்ள புதுத்தெருவில் வசிக்கும் பஞ்சவா்ணம் என்பவரிடம் செல்வி ரூ. 2 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளாா்.

கடந்த சில மாதங்களாக செல்வி வட்டிப் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவா்ணம், அவரது மகன் புருஷோத்தமன் ஆகியோா் சுந்தரகணேசன் அவரது மனைவி ஆகியோரை தகாத வாா்த்தையால் திட்டி மிரட்டினாா்களாம். இதனால் மனமுடைந்த சுந்தரகணேசன் சமயபுரம் பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் புதுப்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த சமயபுரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனா். செல்வி அளித்த புகாரின்பேரில், சமயபுரம் போலீஸாா் பஞ்சவா்ணத்தைக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா். மேலும் தப்பியோடிய பட்டாளி மக்கள் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டத் தலைவா் புருஷோத்தமனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT