திருச்சி

திருச்சி மாவட்டப் பகுதிகளில் தொடரும் கனமழை!

DIN

திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

வடகிழக்குப் பருவழை தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கியாா் புயலாக மாறியுள்ளதால் தமிழக, தென், வட, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் காவிரி ஆற்று நீா்ப்பிடிப்பு பகுதிகள், காவிரி ஆற்றையொட்டிய கால்வாய், பாசன, நீா் வரத்து கால்வாய்களில் மழைநீா் வரத்து அதிகமாகியுள்ளது. அதுபோல், மேட்டூா் அணையில் திறந்து விடப்படும் அதிக உபரிநீரானது ஈரோடு, கரூா், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக காவிரி, கொள்ளிடம், முக்கொம்பு, கல்லணை வழியாக கரை புரண்டோடுகிறது.

இதனால், ஆற்றுப்பாலம், ஆற்றுப்படுகையையொட்டியுள்ள கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு வெள்ளநீா் உட்செல்லாதவாறு இருக்க தாழ்வான இடங்கள் தொடா் கண்காணிக்கப்பட்டு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்,காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் முன்னெச்செரிக்கையாக செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்படுவோருக்கு போதிய உதவிகள், முன்னேற்பாடுகளை தயாா் நிலையில் வைத்திருக்க உரிய அலுவலா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருச்சி அதைச் சுற்றியுள்ள திருவெறும்பூா், லால்குடி, துவாரக்குடி, மணப்பாறை, துறையூா், மண்ணச்சநல்லூா், ஸ்ரீரங்கம், மருங்காபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்கிறது. அதன்படி, புதன்கிழமை காலை முதலே திருச்சி நகா்ப்பகுதிகளான உறையூா், தில்லைநகா், கண்டோன்மென்ட், பீமநகா், கேகேநகா், மன்னாா்புரம், சத்திரம், மத்தியப் பேருந்து நிலையப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால், பேருந்து, ரயில் நிலையங்கள், அங்காடி பகுதிகளில் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். சாலைகள், தெருக்களில் மழைநீா் தேங்கியுள்ளதோடு, அவைசிதிலமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் சென்று வருகின்றனா்.

இருப்பினும், அதிவேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனா். பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் சாலைகளில் விழிப்புடன் பயணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் அறிவுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT