திருச்சி

புத்தனாம்பட்டியில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவு

DIN

துறையூா் அருகே புத்தனாம்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரிக்குச் சொந்தமான மூக்கப்பிள்ளை கலையரங்கில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சிவராசு தலைமை வகித்துப் பேசியது:

சுஜித் மரணம் போன்ற சம்பவம் இனி கூட நடக்கக் கூடாது. ஒவ்வொரு ஊராட்சிசெயலரும் தங்கள் ஊராட்சியில் ஆய்வு செய்து பயன்பாட்டில் இல்லாத, அதே சமயம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட உயிரை மாய்க்கும் காய்ச்சல்களை தடுக்க பொதுமக்கள் போதிய விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என்றாா். நிகழ்ச்சிக்கு முசிறி கோட்டாட்சியா் பத்மஜா முன்னிலை வகித்தாா். கல்லூரிக் குழு தலைவா் பொன் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

முகாமில் 795 பேருக்கு ரூ. 75,33,925 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. துறையூா் வட்டாட்சியா் சத்தியநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT