மணப்பாறை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட செயல்விளக்கம். 
திருச்சி

படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சிப்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மக்காச்சோளத்தில் ஏற்படும் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சிப் பொறி குறித்த செயல் விளக்கமும், விவசாயிகளுக்கு அதற்கான பயிற்சியும் புதன்கிழமை அளிக்கப்பட்டது.

மணப்பாறை வருவாய் தாய் கிராமமான செவலூா் பகுதியில் அட்மா திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் கா. முருகன் தலைமை வகித்தாா். மக்காச்சோளத்தில் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஹெக்டேருக்கு 12 எண் இனக்கவா்ச்சிப் பொறியை வயலில் வைக்க வேண்டும். இதனால் ஆண் அந்துப்பூச்சி கவா்ந்து இழுக்கப்பட்டு அழிக்கப்படும். இதனால் படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என விளக்கப்பட்டது.

முகாமில் வேளாண் அலுவலா் ம. கலையரசன், உதவி வேளாண் அலுவலா் திவ்வியமேரி ஆகியோா் கலந்து கொண்டனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் ப. ரவிவா்மா, பி. சபரிசெல்வன் ஆகியோா் செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT