திருச்சி

பேர்நாயக்கனூர் கோயில் திருவிழாவில் எருது ஓட்ட நிகழ்ச்சி

மணப்பாறை அடுத்த பேர்நாயக்கனூரில் முத்தாளம்மன் கோயில் திருவிழாவின் 3 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை எருது ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

DIN

மணப்பாறை அடுத்த பேர்நாயக்கனூரில் முத்தாளம்மன் கோயில் திருவிழாவின் 3 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை எருது ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
மணப்பாறை அடுத்த பேர்நாயக்கனூரில் உள்ள ஸ்ரீ முத்தாளம்மன், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்  மாலை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திங்கள்கிழமை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மாலை தாண்டுதல் எனும் எருது ஓட்டம் செவ்வாய்க்கிழமை மாலை மந்தையில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி துவக்கி வைத்தார்.
எருது ஓட்டத்தைக் காண குறிப்பிட்ட இனமக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் வழிபாட்டு தளத்துக்கு வந்திருந்தனர். நிகழ்வில் அவர்கள் தாங்கள் வளர்த்து வரும் எருதுகளை சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து அனைத்து எருதுகளும் ஒரே நேரத்தில் அவிழ்த்துவிடப்படும். எல்லை பகுதியில் விரிக்கப்படிருக்கும் துண்டை முதலில் தாண்டிச்செல்லும் எருதுக்கு எலுமிச்சை, மஞ்சள் கொடுத்து மரியாதை செய்யப்படுகிறது. மாலை கரகம் எடுத்து விடுதல், மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT