திருச்சி

ஆயிரம்வள்ளி அயித்தாளம்மன் கோயில் குடமுழுக்கு

DIN

திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள வடக்கு அயித்தாம்பட்டியில் உள்ள ஆயிரம்வள்ளி அயித்தாளம்மன் கோயில் மற்றும் மேலவடுகப்பட்டியில் உள்ள சாத்தாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில்களின் குடமுழுக்கு விழாவானது கடந்த செப் 9 ஆம் தேதி காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு  முதல் கால யாக பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதன்கிழமை மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோயிலின் விமான கலசங்களுக்கும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மகா தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT