திருச்சி

மார்க்சிஸ்ட் அலுவலகத்தை தாக்கியோர் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

DIN


மணப்பாறை: மணப்பாறை அருகே வடக்கிப்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளவர் அழகர். இவர், சனிக்கிழமை வடக்கிப்பட்டி அருகில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றபோது, அங்கு இரு தரப்பினருக்கிடையே கோஷ்டி மோதல் நடந்துள்ளது. மோதலை இவர் விலக்கிவிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். 

இதில் ஒரு தரப்பினர் வடக்கிப்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக மேற்கூரை மீது ஞாயிற்றுக்கிழமை கல்வீசி தாக்கியதாக தெரிகிறது.  வீட்டில் இருந்த அழகரை தாக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி   மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதல் நடத்தியோர் மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT