முகப்பு
திருச்சி

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 10 ஆகஸ்ட், 2020 at 12:33 PM
திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய தொழிற்சங்கங்கள்.
பகிர்:

இந்தியாவை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் மின்வாரிய தொழிற்சங்கங்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அதேபோல திருச்சியில் மின்சார சட்டத்திருத்தம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும். முடக்கப்பட்ட டி.ஏ, லீவு சரண்டர் சலுகைகளை உடனே வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். 

முறைசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திங்களன்று மிளகுபாறையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். 

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் தொமுச மலையாண்டி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் ராஜமாணிக்கம், எம்பிளாய்ஸ் பெடரேஷன் சிவசெல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் பெடரேஷன் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்புரம், லால்குடி, முசிறி, ஸ்ரீரங்கம், துறையூர், மணப்பாறை ஆகிய பகுதிகளில் மின்வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.