திருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சிதிருச்சியில் விவசாயிகள் நூதனப் போராட்டம்
திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் விவசாயிகள் ஆதிவாசி உடையில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓபிசியில் சீர்மரபினருக்கு உள்இடஒதுக்கீடு வழங்க கோரியும், இந்திய மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் வசிக்கின்றனர், அவர்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் , விவசாய உற்பத்தி பொருள்களுக்கு நியாயமான விலை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று இலைத் தலைகளை கட்டிக்கொண்டு ஆதிவாசி உடையில் நூதனப் போராட்டம் நடத்தினர்.
இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.