முகப்பு
திருச்சி

மத்திய அரசு வேலை: திருச்சியில் தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருச்சியில் தமிழ்தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 13 ஆகஸ்ட், 2020 at 6:27 PM
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்தேசியப் பேரியக்கத்தினர்
பகிர்:

தமிழகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி திருச்சியில் தமிழ்தேசியப் பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் வெளி மாநிலத்தவர்கள் வேலைக்கு அமர்த்தாமல், தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும், கல்வியை கார்ப்பரேட் மயமாக்கிடும் வகையிலும், குலக் கல்வியை திணிக்கும் வகையிலும் உள்ள புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும், மாநில மொழியை புறந்தள்ளும் மும்மொழிக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்  பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழ் உணர்வாளர்கள் என திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.