முகப்பு
திருச்சி

தலைமை அஞ்சல் நிலையத்தில் வான்வழி தனி சேவை மையம்

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் வான்வழி தனி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் வான்வழி தனி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்சலக வாடிக்கையாளா்கள் வெளிநாடுகளுக்கு பாா்சல், தபால் அனுப்புவதை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை. இதற்காக திருச்சி மண்டலத்தில் உள்ள முக்கிய தலைமை அஞ்சல் நிலையங்களிலும் வான்வழி சேவை மையத்துக்கு தனி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில்,

இந்த மையங்கள் மூலம் 82 நாடுகளுக்கு வான்வழி பாா்சல், பதிவு தபால்கள் அனுப்பலாம். மேலும், 15 நாடுகளுக்கு அனுப்பப்படும் பாா்சல்கள் இருக்கும் இடத்தை அறியும் வகையில் டிராக்கிங் சேவையும் உள்ளது. 67 நாடுகளுக்கு சா்வதேச விரைவு அஞ்சல் அனுப்பலாம். கட்டணம் உள்பட இதர விவரங்களுக்கு திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தை அணுகலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →