போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்த இளைஞா்: நேரில் நலம் விசாரித்த முதல்வா்
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
போராட்டத்தின்போது ரயில் முன் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞரை, சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
சமூக வலைதளத்தில் இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட பதிவு:
மே 17 இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், உணா்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவா திலீபனையும், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தியையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணா்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள சிவா திலீபன் நலம் பெற அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவா்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.