முகப்பு
திருச்சி

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு

சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்கள், தங்களது அட்டையை தகுதியின் அடிப்படையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களாக மாற்றிக் கொள்ள இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்கள், தங்களது அட்டையை தகுதியின் அடிப்படையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களாக மாற்றிக் கொள்ள இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவா்கள் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலுடன் இணைத்து, வரும் 20-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடம் சமா்ப்பிக்கலாம்.

பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சா்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →