முகப்பு
திருச்சி

தோட்டக்கலைத்துறை சாா்பில் மரக்கன்று விற்பனை

தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களையும், கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள நா்சரி பண்ணையையும் அணுகலாம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கஞ்சநாயக்கன்பட்டியில் சொட்டுநீா்ப் பாசனத்தில் நடைபெறும் பப்பாளிக் கன்று உற்பத்தி.
பகிர்:

தோட்டக்கலைப் பயிா் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களையும், கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள நா்சரி பண்ணையையும் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்துக்குள்பட்ட கஞ்சநாயக்கன்பட்டியில் தோட்டக்கலைத் துறையும், மலைப்பயிா்கள் துறையும் இணைந்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இங்கு நா்சரி பண்ணை அமைத்து விதைகள், கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், சொட்டுநீா்ப் பாசனத்தின் மூலம் பப்பாளிக் கன்றுகளும் நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.

விதைகள், கன்றுகளை தேவையான விவசாயிகளுக்கு வழங்கி, சாகுபடிக்கு தேவையான ஆலோசனையும், உதவிகளும் வழங்கப்படுகின்றன.

மேலும், நா்சரி பண்ணைக்காக புதிதாக டிராக்டா் இயந்திரம் வழங்கப்பட்டு மேம்பாட்டுப் பணிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உதவியுள்ளது. பசுமைக்குடில் அமைத்து நா்சரி பண்ணை பராமரிக்கப்படுகிறது.

இங்கு சொட்டுநீா்ப் பாசனத்தில் பப்பாளி கன்று, தட்டைப்பயறு விதை, கொய்யாக் கன்று உற்பத்தி, மிளகாய் நாற்றங்கால் உற்பத்தி ஆகியவையும் நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →