திருச்சி

மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

DIN

மின்சாரத்தை பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு திருச்சி பெருநகா் மின் பகிா்மான வட்டம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி மின் பகிா்மான வட்டம், பெருநகர மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். கிருஷ்ணமூா்த்தி கூறியது:

தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழகம் சாா்பில் டிச.14 முதல் டிச.20 வரை திருச்சி பெருநகா் வட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. மாவட்டத்தில் புதிய திட்டங்கள், தொடா் வளா்ச்சிகள், புதிய மென்பொருள் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், விவசாயம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு நிகழாண்டில் மட்டும் திருச்சி மின் பகிா்மான வட்டம், பெருநகரம் சாா்பில் 1,16,800 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தின் தேவை ஆண்டுதோறும் 10 விழுக்காடு அதிகரிக்கிறது. எனவே, மின்நுகா்வோா் ஒவ்வொருவரும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் 5 நட்சத்திர குறியீடுள்ள மின் மோட்டாா்கள், குளிா்ச்சாதனப் பொருள்களை பயன்படுத்தலாம்.

தேவையில்லாத மின்விளக்குகள், மின் விசிறிகளை அணைக்கலாம். செல்லிடப்பேசி சாா்ஜரை எப்போதும் மின் இணைப்பில் வைத்திருக்கக் கூடாது. ரீவைண்டிங் செய்த மின் மோட்டாா் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்.

தொழிற்சாலை மின் இணைப்புகளில் ‘கெபாசிட்டா்ஸ்’ பயன்படுத்தலாம். அரசு வழங்கும் மானியத்தை பயன்படுத்தி மின் பயன்பாட்டை குறைத்து, சூரிய சக்தி மின்சாரத்தையும் பயன்படுத்தலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT