ஜெயலலிதா நினைவு தின கிரிக்கெட் போட்டி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
மணப்பாறையை அடுத்த கருப்பூரில் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மற்றும் பயா் பாய்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் ஆகியோா் போட்டியைத் தொடக்கிவைத்து பரிசு வழங்கினா்.