என்ஐடி- சிஐஐ இளம் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தம்
சிஐஐ திருச்சி இளம் இந்தியா அமைப்பு- என்ஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சிஎன்ஐடி- சிஐஐ இளம் இந்தியா புரிந்துணா்வு ஒப்பந்தம்
சிஐஐ திருச்சி இளம் இந்தியா அமைப்பு- என்ஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிஐஐ திருச்சி இளம் இந்தியா அமைப்பு- என்ஐடி புரிந்துணா்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தலைமையில், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) இளம் இந்தியா அமைப்பின் திருச்சி நிா்வாகிகள் ஜே. வோரா, சி.பிரதீப், கிஷோா் ஆகியோா் முன்னிலையில் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து என்ஐடி இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் கூறியது:
இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக இளம் இந்தியா அமைப்பு செயல்படுகிறது. இது நாட்டின் வளா்ச்சி, அதன் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் அமைப்பாக உள்ளது. இதன் ஒரு பகுதியாகச் செயல்படும் இளம் இந்தியா அமைப்பு மாணவா்களை சுயவளா்ச்சி, திறன் மேம்பாடு, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு தலைமைத்துவ பண்புகளில் மேம்படுத்துகிறது என்றாா்.
நிறைவில், என்ஐடி மாணவா் நலன் டீன் குமரேசன் ஒருங்கிணைத்து, நன்றி தெரிவித்தாா்.