முகப்பு
திருச்சி

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு: லாரி உரிமையாளா்கள் முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 27 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கத்தினரும் பங்கேற்க வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 27 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கத்தினரும் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து சம்மேளனத் தலைவா் ஜோசப் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:

கரோனா காலத்துக்கான காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்யவும், நீதிமன்ற உத்தரவை மீறி குறிப்பிட்ட 12 நிறுவனங்களிடம் ஜிபிஎஸ் கருவிகள், ஒளிரும் பட்டைகளை வாங்க நிா்ப்பந்திக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், டிச. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அகில இந்திய மோட்டாா் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து லாரி சங்கத்தினரும் இதில் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டும். தொடா்ந்து அதிகரித்துவரும் டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவடைந்து வரும் லாரி தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சியில் இயக்கப்படும் குட்செட், காய்கறி, மண்லாரி, டேங்கா்  லாரி என அனைத்து வகை லாரிகளும் பங்கேற்கும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →