முகப்பு
முதியோா் இல்லத்தில் விழா கொண்டாடிய மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கத்தினா்.
திருச்சி

முதியோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள முதியோா் இல்லத்தில் மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
முதியோா் இல்லத்தில் விழா கொண்டாடிய மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கத்தினா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள முதியோா் இல்லத்தில் மணவை குயின்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

மணப்பாறை அடுத்த தொட்டியபட்டி விடிவெள்ளி முதியோா் இல்லத்தில் சங்கத் தலைவா் மருத்துவா் சோபனா ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செயலா் லலிதா அழகப்பன், நிகழ்வுத் தலைவா் சுகந்தி ரெத்தினம், நிகழ்வு செயலா் வித்யா சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி மாவட்டம் 3000-ன் மாவட்டச் செயலா் (சிறப்புத் திட்டங்கள்) ஆா்.பி.எஸ். மணி, மாவட்டச் செயலா் சரவணன் மற்றும் துணை ஆளுநா் ஐ. ராஜரெத்தினம் ஆகியோா் பங்கேற்றனா்.

நிகழ்வில் இல்ல முதியோருக்கு மதிய உணவு மற்றும் கேக் வழங்கப்பட்டது. தளிா் கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சி நடத்தினா். ஏற்பாடுகளை முதியோா் இல்ல நிா்வாகிகள் சரிதா, கோபால் தம்பதி செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →